பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு #33

சில நாட்களாவே சொற்கள் என்னைத் துன்புறுத்து கின்றன. சொற்களுக்கும் முற்பட்ட கோலங்கள் ஏதேதோ என்னுள் தோன்றி, தங்கள் கோணங்கள், வளைவுகள், கோணல்களில் என்னை முறித்துப் போட்டு அழகு பார்க் கின்றன. நான் சொல்வதென்ன ? தெரியவில்லையே :

கோலப்புள்ளிகளில் என் இடம் எங்கே ? நான் தேட வில்லை. அவைகள் என்னைத் தேடிக் கொண்டிருக் கின்றன. எவை ? புள்ளிகள்.

புள்ளிகளா?

{} 3 {}

கட்டிலடியில் சலசல...கீழே தோக்குகிறேன்.

வாலின் சுழட்டலில் தான் என்ன லகு, ஜியோமிதி தோற்றது. நேர்த்தியான வளை உயிர்க்கோடுகள், கட்டுக் கட்டாய்க் கட்டுக்குள் புள்ளிகள். எனக்கும் சதா தேடிக் கொண்டிருக்கும் பிளந்த நாவுக்கும் இடைவெளி ஒரடி கூட இல்லை. இதற்குப் படமுண்டோ ? பாலாவின் பின்னல் தடுமனில் எட்டடி.

இந்த அந்தியிருளில், இந்தத் தனிமையில், என்னை யறியாமலே உனக்காகக் காத்திருக்கிறேன். எனக்குப் பயம் தெரியவில்லை. ஒரு அகண்ட விரக்திதான் தேரி கிறது.என் உடலே கலசமாய், அதில் நான் ஒரு காணிக்கை யாகி, என் விரக்தியின் முழுமையில் என் அந்தக் கரனத் தின் நிர்வானத்தில் : இந்தா என்னை ஏற்றுக்கொள்.’

ஆனால் உன் இன்றைய தேடலுக்கு நான் இலக்கு இல்லை போலும். நீ பாட்டுக்குத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறாய். இவன் எங்கே போகப்போகிறான்? இப்போ என்ன அவசரம், பின்னால் பார்த்துக் கொள்ள லாம் என்கிற எண்ணமோ?

க-13.