பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fr. F. FFF,

என்னிக்கோ காமுபாட்டி சொன்னாளே என் தாய் தகப்பன் செத்ததும் என்னைக் காலும் கையுமா அள்ளிப் போட்டுக் கொண்டு வந்ததா அப்பவோ என்னவோ சே! ஒரு தடவை உடம்பு குலுங்கிட கண்ணிலிருந்து தூசி உதிர்ந்தது. வாய்க்கால் மூலம் காணப் போய் அதன் மூலம் என் மூலம் நினைவுவந்து கலங்கல் இன்னும் தெளியாமல்

என்மேல் அனுதாபத்தில் மரக்கள் பெருமூச்

செறிகின்றன. ஊஞ்சலில் படுத்த நிலையிலிருந்தெழ மனமே யில்லை,

அடுத்தாற் போல் ஒரு பெருங்காற்று சுழன்று - வந்து புழுதியை இறைத்துவிட்டு அனுமதியற்ற, அவசர விருந்தாளி கொல்லைப் புறமாக நுழைந்து வாசல் வழி விழுந்தடித்து ஓடுவது போல தெற்கே நுழைந்து மேற்கே வெளியேறிற்று. ஒரு கழுகு, கழுகா பருந்தா ? என்ன வித்யாசம் எனக் கென்ன தெரியும் ? ஆனால் ஒரு கன்றுக்குட்டியளவு பெரி திருக்கும். சிறகடித்துக் கொண்டு தோப்பில் எந்த மரத்தி லிருந்தோ கிளம்பிற்று. கிளம்பினபோது, வேர்வரை மரம் அதிர்ந்திருக்கும். சோம்பிய வீச்சு. ஆயினும் என்ன ! உலகத்தையே அந்த உயரத்தினின்று அணைக்கும் &#_jsro.

என் நீழலில், நீங்கள் எல்லோரும் என் குஞ்சுகள். (அல்லது இரைகள் ?) அவரவர் முறை வரும் போது வரட்டும் எனக்கென்ன இப்போ அவசரம் ?