பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 31

இருந்துண்டா இவ்வளவு அமுல் நடத்தியிருக்கே பாட்டி: இரண்டுகைகள் என் ஒரு கையில் மாட்டிக் கொண்டு விட்டன. என்தோளில்பை.

‘விடுன்னா விடு ! உன்னைப் பலி போட்டுடுவேன்!”

பலியா, பொலியா, பாட்டி?”

‘என்னடா பேத்தறே கழுதே ?’ அவள் உதட்டில் ரத்தம் கசிந்தது.

‘பாட்டி, என்னைப் பெற்றவர்கள் போன வழி, என்னையும் போக நீ பேசாமல் விட்டிருக்கலாம்!”

‘உன்னை ஆளாக்கினப்பறம் உன்னிடம் இப்படி யெல்லாம் கேட்டு வாங்கிக் கட்டிக்கனுமே, அதுக்கு தான்!”

‘இல்லே பாட்டி, நீ எவ்வளவோ நல்ல பண்டமா ஆகியிருக்கமுடியும், உனக்கு மறுவிவாகம் ஆகியிருந்தால், பாவம் உன்னை இளவயதிலேயே கோர ணி பண்ணி, கோலம் பண்ணி-நம் சமுகம் என்ன ச மு. க மே ‘ நெற்றியில் பளாரென்று மறுகையால் அ ைற ந் து கொண்டேன், ‘முறை வழியில் வாழ்வை நிறைவு காண விடாத சமுகம்.”

அவள் கைகளைச் சட்டெனவிட்டேன். என் உணர்ச்சி எனக்குப் பெரிதாகி விட்டது. இனி என்னைத் தொட மாட்டாள் அப்படியே அடித்தாலும் அடித்துவிட்டுப் போகிறாள். பாவம் ஆனால் இதென்ன என் பேச்சு, திடீரென நாடக பாணியில் போகிறது ? எனக்கே உடல் குறுகுறுத்தது.

வாழ்க்கையில். அப்பட்டமான, தோல்வயண்ட சம யங்களை, நேருக்கு நேர் பேச்சுவாயில் சந்திக்க, சமாளிக்க நேர்கையில், இது மாதிரித்தான், நம்மையறியாமலேயே,