பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 @f

அவைகளில் பொம்மை புகுந்து கொள்ளுமோ. அல்ல அது போன்ற சத்தம் எழுமோ?

“மைப்படை!’

அவள் இடது மணிக் கட்டை வலது கையால் தேய்த் துக் கொண்டு நின்றாள். என் மேல் வைத்த விழி இமை கொட்டவில்லை, என் வாயிலிருந்து புறப்பாடுகளை அவள் விழிகள் விழுங்கிக் கொண்டிருந்தன.

இவன் என்ன குட்டுக்களை என்னென்ன கண்டுவிட் உான்?

என்ன உடைக்கப் போகிறான்?

- என்கிற மாதிரி. அழ். முக்-க்கு வெள்ளைப்புடவை.

சலவை காணாமலே துவைத்துத் துவைத்துச் செங் காவியேறிப் போய், அழியாத சமையல் கறைகள் படிந்து போன புடவை: -

‘பாட்டி:”

‘நான் உன் பாட்டியில்லை”

“சரி” இந்த மறுப்பைக் கேட்டுக்கொண்டு எனக்கு அலுத்தே போச்சு. ‘உன் விஷயத்தில் உன் வீட்டார் இத் தனை கொடுமையாக இருந்திருக்க வேண்டாம். உன் ஷன் செத்தான். செத்தவன் தலைவிதி செத்தவனுக்குப் போட்ட முழுக்கோடு அவனை மறந்துவிட்டு, உன்னை இன்னொரு இடத்தில் கட்டிக் கொடுத்து, நீ நிறைவு கண்டு, நீயும் நிறைஞ்சு, உன் குழந்தைகளை நீ பெற்ற நெடுத்துக் கொண்டு, அந்த நிலைமையில் நீ திக்கற்ற ஏன்னைத் தூக்கிண்டு வந்திருந்தாலும் நீயும் இப்படி இருப்பாயா? நானும் இப்படி இருப்பேனா?*