பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 rr. r

so


ஞானோதயத்தைக் கொடுத்து வேதனையை அதிகரிக கிறான்?”

நான் பேசப்பேச அந்த முகத்தில், வரட்டி போல் கணகணப்பு ஏறிக் கொண்டே போயிற்று. காமுப்பாட்டி சந்தன நிறம். அவளைக் கோலம் பண்ணாமல் இருந்தால், பாலியவயதில் அப்பவும் அவளுக்கு ஆபத்துத்தான். ஆனால் அந்த நியாயமே வேறு. அடுப்பில் காய்ந்த வெறும் சட்டி போல அதே காங்கை, அதன் முழுச்செவப்பு அடுத்து வெண்மையை அடைந்தபின் முகம் படிப்படியாக மங்கத் தலைப்பட்டது. அப்படியே குமுங்கி பஸ்மமாய் உதிர்ந்து விடுவாளோ?

என் கண்ணெதிரே ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டி ருந்தது. பயங்கர அதிசயம். காமுப்பாட்டி அவளுள் நேர்ந்து கொண்டிருக்கும் கடையவில், காமுவும் பாட்டி யுமாகப் பிரிந்து காமு கருகிப் போய் பாட்டி மட்டும் இன்னும் பாட்டியாகிக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி தள்-ள்-ளா-ஆ-ஆ

முகத்தைப் பொத்திக் கொண்டு ஓடினேன். ஒடிக்கொண்டேயிருந்தேன்.

5

என் கால்கள் வாடாவூருக்குத்தான் இழுத்துச் சென்றன. அங்கு தான் விமோசனம் என்று ஏன் எண்ணமோ ? வெய்யவில் மஞ்சள் மாறுமுன்னரே ஊர் போய்ச் சேர்ந்து விட்டேன். கதவு மூடியிருந்தது. தட்டினேன். காமுப்பாட்டியை எதிர்த்த பின் எதற்குமே துணிச்சல் தானே வந்து விடுமோ ?

இதோ

நந்தவனங்கள் காட்டிக் கொண்டு

மன மணங்கள் வீசிக் கொண்டு