பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 43

‘என்ன தம்பி, மூணு நாளா எங்களைப் பம்பரம் ஆட்டிட்டியே!”

“என்ன ஆச்சு?” ஆனால் என் குரல் எனக்கே கேட்கவில்லை. எழுந்திருக்க முயன்றேன். அந்த ஆள் ஒடிவந்து என்னைக் கையமர்த்தினான்.

“அவசரமில்லே. செந்தாமரை செந்தூ-ஊ-!”

அழைத்தது ஒரு பெயர்தான். ஆனால் திடுதிடுமெனப் பல கால்கள் ஓடிவரும் சப்தம், நிமிஷமாய் நண்டு சுண்டு வண்டு குண்டு சுக்கங்காய்கள் ஒரு சின்னக் கும்பல் ஆட்டிலைச் சூழ்ந்து கொண்டது. சிரித்த முகங்கள் வியப்பு முகங்கள். வெட்கப்படும் முகங்கள். பார்க்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது. பார்க்கப் பார்க்க ஏதேதோ புண்கள் ஆற்றும் முகங்கள். -

அப்போது நாத சுரம், மீன் கொத்தி போல், பஹா ஷோக்காய் ஒரு முறை, பனைமர உயரத்தினின்று தடாலென்று ஒரே வீச்சில் விழுந்து முங்கியெழும்பி மறுபடியும் உச்சி உயரத்துக்கு அதே தம்'மில் எழும்பும் வழியில் ஒரு அந்தர் அடித்தது.

மேலே அண்ணாந்து காட்டி, கையை வினாவில் அசைத்தேன்.

‘ஒ அதுவா கோமுதி பழகநா. வாத்யம் வீட்டில் இருக்கு. என் பாட்டன் வரைத் தலைமுறை வாத்யம். ஆனால் அதில் அப்புறம் யாருக்கும் நாட்டம் இல்லை. கோமுக்கு வேண்டாத்த வேலை. கோமு மூத்தவ. இதுங்க எல்லாம்- அத்தனை பேரையும் அணைத்த ஒரு கை வீச்சு- இந்த செல்வத்துக்கு ஆண்டவன் குறை வெக்கல்லே. விளையும் பயிர் முளையிலே. படிப்பு வரல்லே. வாத்யமும் வாசிக்காதுங்க. இத்தனைக்கும் நாங்க நாயன ஜாதிதான். நான் வாசிக்கிறேனா? நான் பாங்கிலே ப்யூன் வேலை, மிச்ச நேரத்துக்கு விவசாயம்.