பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 6)ffr*

இவர்கள் எப்படியோ? எப்படியானும் இருக்கட்டும். அவள் மூச்சு நாயன ஜாதிதான்.

என் நெஞ்சைப் படித்தாற் போன்று

“மகளிடம்தான் பரம்பரை வித்தை பரிமளிக்குது. பிரயோசனம்? அதன் திமிர் அடக்கி அவ என்ன செய்யப் போறா? மேடை ஏறப் போறாளா? ஆனால் அப்படியும் இப்ப நடக்கு. சினிமாவிலே பாக்கோம். கூந்தல் அவிழ்ந்து கிட்டு பெண்தவில். போன வருடம் பிரம்மோற்சவத்.ை

துக்குப் பொம்பளே செட் வரவழைச்சாஹ: கோமு. நெனப்பு அப்படியெல்லாம் இருக்கும்னு தோணல்லே. கட்டிக் கொடுத்து எட்டு வருடமாச்சு. இன்னும்

வவுத்துலே பூச்சி வெக்கல்லே. அதுவும்தான் ஆண்டவன் சித்தம். மருமவப் பிள்ளை போவீசுலே ஏட்டு, டுட்டி மேலே போயிருக்காப்பிலே. நான் என்னவோ கதை பேசிட்டேயிருக்கேன். ஆள் அகப்பட்டாப் போதும். பேச்சுக்கு முத்தாய்ப்பு மறந்திடுவேன். உன் பேரென் னவோ? முத்தய்யா என்பாங்க என்னை. செந்தாமரை, அம்பிக்குத் தோசை கொண்டு வா. அம்பிக்கு ஊட்டி விடு. கையைத் துக்க முடியுதோ இல்லியோ?”

கைக்கு என்ன?” இருகைகளையும் பார்த்துக்கொண் டேன். என் குரலை முதலாக இங்கு கேட்கிறேன். கிணற் றிலிருந்து வருகிறது.

“என்னவா? தேள், அம்பி, தென்னைமரத்தேள், கருந்தேள்!’ ஆள் காலின்னே நெனைச்சுப்புட்டேன். என்ன வாந்தி என்னாபித்தம், வாயிலே நுரைதள்ளது பினாத்தினா விலாசம் கிடைக்கும் ஆள் விடலாம்னு பார்த்தா, அதுலே எப்படி கெட்டியாயிருந்தே, எனக்கு இன்னும் மலைப்பாயிருக்கு நேரேயே கேக்கலாமின்னா, தெனைப்பிலே கட்டையாக் கிடக்கே. வம்பை விலைக்கி வாங்கறதுக்கு முத்தையா - இப்படி எனக்கு ஒரு பேர் உண்டு. அதை யேன் கேக்கறே போ! அது தேவையில்லே.