பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடு கு 49

உன்னிப்பாப் பார்த்தால், கோமுவின் மேல் உதட்டில் லேசான அரும்பு தெரியும், போகப்போக எப்படியோ ? இப்போ முகத்தைக் கெடுக்கல்லே.

‘மஞ்சள் தேச்சுக் குளின்னு கழுதையா கத்தறேன். இதை மறுக்கி மறுதரம் சொன்னால், மாற்றாந்தாய்க் கொடுமை!”

ஆமா சித்திக் கென்ன வேலை ? இப்பிடித்தான் ஏதாச்சும் புலம்பிட்டே யிருப்பா!’

‘'வேளையிலே ஒரு புள்ளையைப் பெத்துக்க. திருப் பதி உண்டிலே போட்டாப்பிலே அவனை இதுக்கே விட்டுடு, அவன் மூலம் உன் ஆசையைத் தீர்த்துக்க."ன்னு தாத்தா எத்தினியோ சொல்லிப் பாத்தாச்சு. அவர் இருக்கப்பவே எனக்குக் கலியாணம ஆயிட்டுது. அவர் சொன்ன வேளை மொதலுக்கே இன்னும் வழியில்லே. வருடம் எட்டு ஆவுது. இந்தக்குழலோடு மல்லாடி மல்லாடி நானும் பாதி ஆண் புள்ளே ஆயிட்டேன்”

கோமுவுக்கு ஆண்டாவனைகள் தான், எப்பவும் ‘சப்பளாட்சனம் வாசிக்கையில், குழலைத் துங்கிப்பிடிச்சு அதற்கு ஏற்றபடி நிமிர்ந்து விறைத்து விட்டமுதுகு. குரல் அந்த நாள் ஸ்டார் aேri மாதிரி ஆண் குரல் ஒரு மார்னிங் ஷோ பார்த்தேன். குரலில் விந்துக்கள். Grt flugte, Garbo Taeks–The World (stems-65 (tidligio MGM)

கோமு அழகு இல்லை. ஆனால் அவளிடம் ஒரு தோரணை அழகு. அங்க அசைவுகள் ஒரு இசைவழகுஒ இதற்கு மேல் எனக்குச் சொல்லத் தெரிய வில்லை... இப்போதைக்கு எனக்கு அவள் வாயிலிருந்து வெளிப்படும் விஷயம்தான் பெரிசு.

க- க்