பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56; GfT *rs

‘ஆசைவிட மாட்டேன்குதே அம்பீ! மடியில் மான் குட்டியாட்டம் வாத்யம் எப்போ என்னிடம் மனம் விட்டுப் பேசும் ஆசைகாட்டுது. ஆனால் ஒடி ஒளியுது. என்ன செய்வேன் ? என்ன செய்வேன் ?”

தொடையில் சீற்றத்தில் அறைந்து கொள்கிறாள். சாமி வந்தாற் போல், உடல் லேசாக மிதப்பலாடுகிறது

இப்படியும் ஒரு தவிப்பு உண்டா ? ஆனாய்ப் பேசு கிறாளா ? பெண்ணாய்ப் பேசுகிறாளா ? என்னோடு பேசுகிறாளா? தன்னோடு பேசுகிறாளா? பாலேஇல்லாமல் வெறும் குரலாய்ப் பேசுகிறாளா ? ஏதோ ஒரு விதபயமா யிருக்கிறது. இவனைக் கண்டு அல்ல. இவள் படும் உண்மையைக் கண்டு. இவள் தவிப்பு ஒரு பெரிய அலை யாகத்திரண்டு என் தொண்டையுள் மோதி, உடைந்து, துரை சொரிநது, அகன்று விரிந்து மீள்கையில் என்னையும் தன்னோடு இழுக்கிறாற் போல்...

‘இது எனக்கு வசப்படனும்னு ஒரு பொழுது இருந்து பார்த்தாச்சு. முழுக்கோழி தின்னு பார்த்தாச்சு-ஆமா உனக்காத்தான் இப்போ வீட்டிலே சைவ உணவு, நடமாடுது, இன்னும் ஒண்னு பாக்கி, தண்ணி!” கண் களில் மீண்டும் அந்த மின் வெட்டு, அதையும் ஒருநாள் போட்டுப் பார்த்துட வேண்டியதுதான். எப்படியேனும் இது எனக்கு வசப்படனும்.”

வேடிக்கையாகச் சொல்கிறாளா ? வே னு ம் னு, சொல்றாளா ?

எங்கள் இருவருக்குமிடையே

இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு

குழல் ‘அமுத்தலா ரத்னகம்பளத்தில் வீற்றிருக்கிறது

{} {). .

‘அம்பீ ! இதுதான் ரீதி கெளளை

-இதுதான் சாமா

-இதுதான் கேதார கெளளம்

இது எல்லாமே உயிரை உருக்கிடும்.