பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

ஆனால் இப்படி வந்து முடியும் என்று கண்டேனா ? எதில் ? நான் இன்று வீடு திரும்புகையில் கோமு இருக்க மாட்டாள். ஆனால் அதற்கும் முடியும் ?

‘திடீரென்று காரணம் ?”

(ஏதோ ஒன்று கேட்கனும்)

நான் என்ன செய்ய

“”

‘நானா ?” எனக்கு உடம்பையே தூக்கி வாரிப் போட்டது.

ஆமா, உன்னை வீட்டில் வெச்சுக்கக்கூடாது, வீட்டை விட்டு வெளியேத்தணும்னு மருமவப்பிள்ளை ஒரு வாரமா முஸ்தீபா நிக்கிறாரு.”

“நான் என்ன செஞ்சேன் ?’ அழுது விடுவேனோ என்று பயம் வந்து விட்டது.

“நீயும் கோமுவும் சேர்ந்து அரட்டையடிக்கறது அவனுக்கு ஆவல்லே. அவங்க இலாக்காவிலேயே அது

தானே அரிச்சுவடிவே முதல் பாடம் சந்தேகப்படு !

யாருன்னு பார்க்காதே. எல்லாரையும் சந்தேகப்படு, நான் கூட சொல்விப் பார்த்தேன். மாப்பிள்ளை, நீ பாவம் பண்றே. கோமு அம்பீயைவிடப் பத்து வருடம்

மூத்தவ, இடையிலே அவளுக்கு மூணு தம்பியிருக்க முடியும்’னு. அதுக்கு அவன் ஒரு பதில் சொன்னான் பாரு, எனக்கு நினைக்கவே செவி கூசுது. என் வீட்டில் சாக்கடைத் தண்ணி கூடத்தங்கறதில்லே. வாழைக்குப் பாயுது. வாழை தார் போடுது, வாழையடி வாழையா வளர்றது, வழங்குது. சரி-” சூள் கொட்டினான் அவங்க அவங்க சாக்கடை அவங்களது. நமக்கென்ன ? நீ இங்கே ஜாடாயிருக்கப் ேப ா றி யா? எனக்குத் தெரியாதா? இல்லை எனக்குப் பி ள் ைள யி ல் ல ள .ெ ச த் தா, உன்னை சுவீகாரம் எடுக்க ? இல்லை

க-6.