பக்கம்:கழுதை அழுத கதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠഭൂു മാ

தீதோ இலைநன்றோ!

தேற்றிக்கொள் உன்மனத்தை! வீணாய் வருந்தாதே!

வீறுகொள் உள்ளத்தில், காணாமற் போனவுன்றன்

கண்மணியைத் தேடிடுவோம்! 830 மேலேவா” - என்றபடி,

அன்பு மிதந்துவரக் காலால் தரையறைந்து,

கண்ணால் அழைத்ததுவாம்!

காளை யழைத்தவுரை

கழுதை மனங்கொண்டு, தோளை மிகத்தாழ்த்தித்

தொங்கும் முகத்தோடு, நாணம் உயிர்விழுங்க

மெல்ல நடந்துவந்து, 835 காணவும் வெட்கமுற்றுக் கண்கள் கவிழ்ந்தபடி "அண்ணா:இப் பேதையினை

அன்பால் பொறுத்திடுங்கள்! பெண்ணாய்ப் பிறந்தால்

பெருந்துயரம் வந்தாலும் தாங்கத்தான் வேண்டுமென்ற

தன்மை தெரியாமல், நீங்கிவிட - என்னுயிரை

நீக்கிவிட எண்ணிவிட்டேன்! 840

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/124&oldid=666337" இலிருந்து மீள்விக்கப்பட்டது