பக்கம்:கழுதை அழுத கதை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മ്യു ജ്ജു് ു്

நல்லரசு, நல்லநெறி,

நல்லகுடி - என்றபடி 1165 எல்லாரும் பேசி

இறும்பூது கொள்ளுமாறு - கட்டமைத்துக் கொண்டு

கடமையினை மேற்கொண்டு திட்டமிட்டு வாழ்ந்திடுவோம்!

தீங்கின்றி நாம் மகிழ்வோம்!

ஓங்குயர்ந்த நல்லன்பீர்!

ஒப்புகின்றீர் தானே? - என்று

ஏங்குகின்ற நன்னெஞ்சால்

எக்களித்துக் கேட்டிடவே 1170

ஆங்கிருந்த மாக்களெல்லாம்

ஆம்ஆம்என் றொப்பினவே!

தீங்கிறந்த நல்லுளத்துத்

தென்னாட்டுப் பெண்கழுதை பின்னும் குரலுயர்த்திப்

"பேரன்பு சான்றவரே! முன்னர்யான் வாழ்ந்திருந்த

ஊரின் - முழுக்கதையை - நாமறிந்து கொண்டால்தான்

நல்ல அரசமைக்க 1175 ஏமநெறி நாம்பெறுவோம்”

என்றுணர்த்தி மேலுரைக்கும்!

"கேளுங்கள்! நல்விலங்கீர்!

கீழ்மை உயிர்கள் - என

tis

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/159&oldid=666372" இலிருந்து மீள்விக்கப்பட்டது