பக்கம்:கழுதை அழுத கதை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óg2の2eラ ダ22う のの2少

நல்ல பொறுப்புகளை

நான்வழங்கப் போகின்றேன்!

எல்லாரும் ஒத்துழைத்தே

ஏற்றமுறச் செய்யுங்கள்!

எல்லாரு மே,பதவி

ஏற்க இயலாது! 1645 வல்லார் ஒருசிலர்க்கே

வாய்ப்பை வழங்குகின்றேன்! நானழைக்கும் வல்லோர்கள்

நம்முன்னர் வந்துநிற்க! ஏனிவர்க்குத் தந்தேனென்

றெண்ணாதீர்' என்றுரைத்தே,

'காளை எனக்குமெய்

காப்பாள ராய்அமைக! வாளை உகிராக

வைத்த வரிப்புலியும் 1650 தானைத் தளபதியாய்த்

தாங்கிப் பொறுப்பேற்க ! யானைகள் காவலர்கள்! யாவையுமே ஆராயும் குள்ளநரி ஒற்றர் 1

கொடுங்கழுத்து நீள்சிவிங்கி, கள்ளமதி ஒற்றர்க்குக்

காலும் துணையொற்றர் 1

ஊளைசெய் ஓநாய்கள்

உண்மையிராக் காவலர்கள்! 1655

156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/197&oldid=666410" இலிருந்து மீள்விக்கப்பட்டது