பக்கம்:கழுதை அழுத கதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2多 ?@225 ●ラの2多

கற்றைக் குடுமிமயிர்

காற்றில் சிலிர்சிலிர்க்கும்!

பூணுால் அணிவார்;

'புரோகிதங்கள் செய்திடுவார்;

காணாக் கடவுளுக்கே

"காவலர்யாம்' என்றுரைப்பார்! 475

தெய்வப் பிறவியென்பார்;

தீண்டிவிட்டால் தீட்டென்பார்;

பொய்புளுகு மூட்டைப்

'புராணங்கள் பாடிடுவார்.

'சாத்திரங்கள் பேசிடுவார்; 'சாதி குலம்வகுத்தார்;

நாத்திறத்தால் ஏய்ப்பார்;

நடிப்பால் பிழைத்திடுவார்!

அன்னவரின் பேச்சில்

அறவே மயங்கியவர் 480 மன்னவ ரானாலும்

மதியிழந்தே போவார்கள்.

மொத்தத்தில் மக்களெனும் மூட இனத்தினுக்கு

மெத்தப் பெருமையில்லை!

மேற்பிறவி என்பதும்பொய்!

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/87&oldid=665481" இலிருந்து மீள்விக்கப்பட்டது