பக்கம்:கழுமலப்போர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இவ்வாறு அன்பு நெறியிலும், அரசியல் முறையிலும் சிறந்தோனாய், விளங்கிய செங்கணான், இறுதியில் இறைவன் திருவடி நிழல் அடைந்து இறவாப் பெருநிலை பெற்று விட்டான். இதுவே சேக்கிழார் கூறும் செங்கணான் வரலாறு.

“வெண்நாவல் இறைக்கொளிநூல் பந்தர் செய்த
        வியன் சிலம்பி அது அழிந்த வெள்ளா னைக்கை
உள்நாடிக் கடித்தஉடல் ஒழியச், சோழன்
        உயர்குலத்துச் சுபதேவன் கமலத்து ஓங்கும்
பெண்ணாகி யவள்வயிற்றில் வைகிச் செங்கண்
        பெருமானாய்ப், பெருங்கோயில் பலவும் கட்டிக்
கண்ணார்வித் துயர்தில்லை மறையவர்க்கும் உறையுள்
        கனகமய மாக்கிஅருள் கைக்கொண் டாரே”

என்ற ஆசிரியர் உமாபதியார் ஆக்கிய திருத்தொண்டர் புராண சாரச் செய்யுள், அவ்வரலாற்றைச் சுருங்க உரைப்பதும் காண்க.

அம்பர், வைகல், நன்னிலம் முதலான இடங்களில் கோயில் எடுத்தவன் கோச்செங்கணானே என்று, சுந்தரரும், சம்பந்தரும் பாடிய தேவாரப் பாடல்களும் சான்று பகர்கின்றன.

இவ்வாறு, சுத்தசைவனாய், சிவத்தொண்டு புரிந்தவனாய், சைவசமய ஆசிரியர்களால் பாராட்டப்பெற்றவனாய செங்கணான், வைணவப் பெரியார்களாய், திருமங்கை ஆழ்வாராலும், பொய்கையாழ்வாராலும் பாராட்டப் பெற்றிருப்பது, செங்கணானின் எம்மதமும் சம்மதம் என்ற பரந்த சமரச சமய உள்ளத்தை உணர்த்துவதாகும். ‘உலகம் ஆண்ட தென்னாடன், குடகொங்கன், சோழன், ‘தென் தமிழன்’'வடபுலக்கோன்,’ ‘கழல், மன்னர் மணிமுடிமேல் காகம் ஏறத், தெய்வாள் வலம் கொண்ட சோழன்.’ ‘விறல் மன்னர் கிறல் அழிய வெம்மா உய்த்த செங்கணான்,’ ‘புடை மன்னர் உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/34&oldid=1359498" இலிருந்து மீள்விக்கப்பட்டது