பக்கம்:கழுமலப்போர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

லாமை குறித்து ஏற்படுத்தும் கட்டும் காவலும், எவ்வளவு அழிக்கலாகா ஆற்றல் உடைய ஆகுமோ, அவ்வளவு ஆற்றல் வாய்ந்தன, குடவாயிற் கோட்டத்துக் கட்டும் காவலும் எனக் கூறியுள்ளார், அவ்வூரில் வாழ்ந்திருந்த புலவர் ஒருவர்[1]

அந்தக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில், சேர நாட்டுக் கொற்றவனை அடைத்த பின்னரே, செங்கணான் உள்ளம் சினம் ஆறிச் சிறிதே அமைதியுற்றது.

கழுமலப் போர் முடிவையும், கணைக்கால் இரும்பொறை சிறைப்பட்டதையும் கேட்டார் புலவர் பொய்கையார். தம் புலமைப் பெருமையை நிலைநாட்டுவான் வேண்டி, ஒவ்வொரு நாடாக, ஒவ்வொரு நகராகச் சென்றுகொண்டிருந்தமையால் கணையனின் கழுமலப் போர் முயற்சியை அறிந்திலர். அறிந்திருந்தால், அது நிகழாவாறு தடுத்திருப்பர். அவர் அதை அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போனமையால், கழுமலப் போர் நிகழ்ச்சியை அவரால் தடுத்தல் இயலாது போயிற்றோ, அல்லது, அதை அறிந்தும், மூவன் போன்ற பெருவீரனையே வென்று, அவன் வெண்பற்களைத் தன் தொண்டி நகர்த் தலைவாயில் கதவில் அழுத்தி வைத்த மாவீரனாகிய கணையன் தோல்வி காணான் என்ற நம்பிக்கையால், அவர் அவன் முயற்சியைத் தடுத்திலரோ அறியோம். போர் நிகழ்ந்துவிட்டது. அவனும் சிறைபுகுந்துவிட்டான்.

அது கேட்கவே அவர் ஆறாத்துயர் உற்றார். கெட்ட காலை விட்டோடும் கொடுமையை அவர் உள்ளம் அறியாது. நண்பனை அவன் செல்வக்காலை விட்டு வாழினும், அவன் அல்லற்காலை அகலுதல் கூடாது எனக் கருதும் ஆழ்ந்த நட்புணர்வு உடையவர் புலவர். பெருஞ்சோறு அளித்துத்


  1. “வென்வேல், கொற்றச் சோழர் குடந்தை வைத்த
    நாடுதரு நிதியினும் செறிய
    அருங்கடிப் படுக்குவள் அறன் இல் யாயே” —அகநானூறு: 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/85&oldid=1360644" இலிருந்து மீள்விக்கப்பட்டது