பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

29

ஆண்டவன் திருநாமமே அவளுக்கு;
வறுமையின் வன்மை, வன்மை, ஒண்மை!...”

-என்று கவிதை மூலம் பேசுகிறார் கவிக்குயில் சரோஜினி தேவி! கவிதை எமக்குத் தொழில் என்று அவர் சும்மா இருந்துவிடவில்லை.

தேசத்துக்கும், ஏழை மக்களுக்கும் எப்படியாவது, எந்த வழியிலாவது சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உந்தியது.

மக்கட் தொகையில் சரி பாதியுடைய பெண்ணினம், கல்வியில் மட்டும் தாழ்வுற்றுக் கிடப்பது ஏன்? என்ற கேள்வியை தாய்க்குலம் சார்பாக எழுப்பினார். பெண் கல்விக்கு இடையறாத முயற்சிகளை சமூகம் மூலமும், அரசு வாயிலாகவும் ஏற்பாடு செய்தார்.

ஐதராபாத் நகரைச் சூழ்ந்து விட்ட வெள்ளக் கொடுமையைக் கண்டு மன வேதனைப்பட்டதோடு நிற்கவில்லை! அச்சேவையிலே சரோஜினி நேரடி பங்குகொண்டு பணியாற்றினார்.

பணக்காரர்கள் பண உதவிகனைச் செய்தாலும், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும், அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்மணியாக சரோஜினி தேவி இல்லை. எந்த உதவியும் நம் கையாலேயே செய்யப்படவேண்டும் என்ற நோக்குடையவர் ஆனார்.

பொதுப் பணிகளுக்குப் பொருள் திரட்டும் பணியில் களைப்பே இல்லாமல் உழைக்கும் மன அறம் கொண்டார். எத்தகைய இரும்பு நெஞ்சனையும் இளக வைக்கும் நெருப்புலையாகப் பாடுபட்டார்.

காந்தியடிகளுக்கு அவரது தாயார் புட்லி அம்மையார் அரிச்சந்திரன் கதை கூறி அற மனதை வளர்த்ததைப்