பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கவிக்குயில் சரோஜினியின்

"போரும்-பூசலும் நிறைந்துள்ள இடங்களில் மறத்தை புல், அறியாமையையும் அன்பு வெல்க!"

"வாளேந்தியப் போர் வீரர்கள் போர் முனைக்குச் சென்றால், நான் எனது இனிய பாடல்களையும் ஏந்தி உடன் செல்வேன்!”

"அயர்ந்து, களைத்துச் சோர்ந்து காணப்படும் அவர்கள் கரங்களுக்கு நான் நம்பிக்கை என்ற வலிமையைக் சேர்ப்பேன்!"

"எங்கும் அமைதி நிலவுக, அதனுள் ஆனந்தம் துளிர்த்திடுக. சத்தியம் வெல்க. அன்பும் இன்பும் வையகமெலாம் பரவிடுக."

-என்று கவியரசி சரோஜினிதேவி தேசபக்திப் பாடல்களை பற்பல எழுதிக்குவித்தார் அதனால், மக்கள் அவரைத் தேசியக்கவி என்று போற்ற ஆரம்பித்தார்கள்!

தேச சேவையே, நாட்டுப்பற்றே, சுயராஜ்ஜிய மந்திரமே, அவரது வாழ்க்கையாக மாறிவிட்டது. காந்தியக் கொள்கை மூச்சானது; தான் பின்பற்றும் மதம் அதுவே என்ற உணர்ச்சிக்கு அவர் உந்தப்பட்ட கவிஞர் ஆனார்.


10. மறுபடியும் பிரிட்டிஷ் அரசு பணிந்தது!

சரோஜினி தேவி கி.பி. 1922-ம் ஆண்டு தென் இந்திய சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஈடுபட்டார். கேரள மாநிலத்தில் உள்ள கள்ளிக்கோட்டை என்ற ஊரிலே பேசினார்!

அப்போது கேரளாவிலே வாழும் 'மாப்பிள்ளை' என்ற ஒரு வகுப்பாரை, ராணுவ வீரர்கள் முன்பு பஞ்சாப் மாநிலத்திலே பெண்களையும்-ஆண்களையும் காட்டு மிராண்டித்தனமாக துன்புறுத்தியதைப் போல, கேரளத்-