பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

57

திலும் மிகக் கீழ்த்தரமாகக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் அவர் அன்று பேசிய மேடையிலே கூறிக் கூறி வன்மையாகவும், ஆணித்தரமாகவும், ஆவேசம் பொங்கப் பொங்கக் கண்டித்தார்.

பாஞ்சாலத்திலே ராணுவம் நடந்து கொண்ட கொடுமைகளைப் போல-கேரளத்திலும் நடந்து கொன்டது நியாயந்தானா? என்று கேட்டார்.

பெண்களை நிர்வாணப்படுத்துவதும், அவர்களைக் கற்பழிப்பதும், கதறக் கதற அவர்களை உதைப்பதும்தான் பிரிட்டிஷ் ராணுவத்தின் வீரச்செயல்களா?

மனித குலத்தைத் திடுக்கிடச் செய்யும் இத்தகைய அநீதிகள் ராணுவ வீரர்களின் வீரத்துக்கும்-தீரத்துக்கும் இழிவாகாதா? கோழைத்தனமான இந்த மிருகச் செயல்களைச் செய்யவா மக்கள் வரிப் பணங்களைக் கொடுக்கிறார்கள்?

மேற்குறிப்பிட்ட கடுமையான கேள்விகளை கேட்டுப் பிரிட்டிஷ் ஆட்சியின் அவலங்களைக் கண்டித்தார்! அதனால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டதைப் பிரிட்டிஷார் நடத்தும் சென்னை அரசு பார்த்துக் கிலி கொண்டது.

நெருப்பு உமிழும் சொற்களால் கவியரசி அன்று கேட்ட கேள்விகள், கவிகுயிலுக்கு ஒரு புகழைத் தேடித் தந்தது மட்டுமன்று அங்கு வாழும் மாப்பிள்ளை வகுப்பாருக்கும் ஒரு ஆறுதலை அளித்தது.

சென்னை அரசாங்கம் ஆத்திரமுற்றது; காரணம், கேரளப்பகுதி மக்கள் இடையே உருவான பரபரப்புச் சூழ் நிலைதான் பிரிட்டிஷ் இந்திய மந்திரி மாண்டேகு முன்பு பஞ்சாப் படுகொலைப் பிரச்னையிலே கவியரசியை