உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கவிக்குயில் சரோஜினியின்

என்னைப் பொறுத்தவரை ஏந்துவேன் காங்கிரஸ் கொடியை உயர்த்திப் பிடித்து படை நடை போடுவேன்; கொடியைத் தாழ்த்தமாட்டேன். மற்றவர் தாழ்த்தினாலும் பொறுக்க மாட்டேன். வீரசுதந்திரம் பெறும் வரை ஓய மாட்டேன். என்னைப்போல நீங்களும் ஊர்தோறும் ஏறுநடை வீறுடன் செயலாற்றுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

தாய்மார்களே! வீட்டுப்பணிகளை திறமையாகச் செய்பவர்கள் நீங்கள் நம் நாட்டுப் பணியையும் தீவிரமாகச் செய்திட முன்வந்தாக வேண்டும். இந்தியாவின் மூலப் பொருள்களையும், மூலதனங்களையும் காப்பாற்றும் உரிமை தமக்கு வேண்டாமா?

பாரதமாதாவின் பக்தி மிக்கப் புதல்வி என்ற முறையில், எல்லாப் பணிகளையும், அவை எவ்வளவு கடினமானவையாக இருப்பினும் கடுமையாகச் செய்து காட்டுவேன்! மகாசபை அன்பர்களிடம் பேசி கட்சிப் பூசல்கள் என்ற வேரை அறுப்பேன்.

பிரிவினையாகாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை போல் ஒன்றுபட்டு, பகைவிட்டு பசுமையாக வாழவேண்டி நாம், நமக்குள்ளே சாதிப்பகைகளையும், மதப்பகைகளையும், மறந்தும் மூளவிடவேண்டாம். என்று கேட்டுக் கொள்கிறேன்.

காந்தியடிகள் நமக்கு மகான். அவர் காட்டும் வழியில் நடப்போம். வலியவரும் மெலியவரும், நலிந்தவரும் நயந்தவரும் சரிநிகர்ச் சமானமாக வாழவேண்டும் என்ற புதுமுறையை, புனிதவழியை நமக்கு அண்ணல் காட்டுகிறார்.

சமத்துவம், சகோதரத்துவம், இந்தியாவிலே உள்ள மக்களுக்கு மட்டுமல்ல; இந்தியாவைத் தாய் நாடாக