பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

ஊரும் பேரும்

பிறந்த ஊர்

ஒட்டக்கூத்தர் ஊரைப் பற்றிப் பல மாறுபட்ட கருத் துகள் நிலவுகின்றன.

- சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிங்தையுள்ளே

கின்றளவில் இன்பம் கிறைப்பவற்றுள்-ஒன்று மலரிவருங் கூந்தலார் மாதர்நோக்கு, ஒன்று மலரிவருங் கூத்தன்தன் வாக்கு. "

என்ற தண்டியலங்கார மேற்கோட் செய்யுளின் அடிகளில் * மலரிவரும் என வரும் சொற்கள் கொண்டு கூத்தரின் பிறப்பிடம் மலரி என்று கூறுவர்.

கீழ்க்காணும் சோழமண்டலச் சதகச் செய்யுளொன்று கூத்தரின் பிறப்பிடம் சீகாழியே எனச் செப்புகின்றது.

  • ஒத்த துணர்ந்த நாடனைத்தும் ஒருங்கே கூடி உயர் கூத்தன்

கத்தி யலையத் துரத்துதலும் கசிந்துகாழிக்

கவுணியர்கோன் பத்தி யுடனே தக்கன்மகப் பரணி பாடப் பணிந்து முத்தின் வைத்த சிவிகை மகிழ்ந்தேற வைத்தார் சோழமண்டலமே."

மேலும் இதற்கு ஆதாரமாகக் கூத்தர் தம் நூலில் வைரவர் வணக்கம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, வைரவக் கடவுள் சீகாழித் தலத்தில் மட்டும் எழுந்தருளி வித்துள்ள சிறப்பினைக் குறிப்பிடுவர். மேலும் சீகாழியில் கூத்தரைப் போற்றித் திருவிழாக்கள் இன்றும் எடுக்கப்படு வதனைக் காட்டுவர். கூத்தர் இயற்றியுள்ள நூல்களின் ஏட்டுச்சுவடிகள் சீகாழி மடத்திலிருந்தே முதன் முதலாகக் கண்டெடுக்கப்பட்ட செய்தியினைத் தம் கருத்திற்கு வலு வான சான்றாகச் சுட்டுவர்.

அடுத்து, கூத்தர் சோழநாட்டிலுள்ள திருவாய்மூருக்கு அடுத்தமைந்துள்ள மணக்குடியில் பிறந்தவர் என்பர்.