பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13

என்று வேறு சிலரும் கூறுவர். ஒட்டக்கூத்தர் எனப் பெயர் அமைந்ததற்கு வேறு ஒரு காரணமும் கூறுவர். அதாவது இவர் பிறந்த மரபினைச் சேர்ந்த செங்குந்தர்கள் பலர் திரண்டு வந்து இவரிடம் தம் மரபின் பெருமை விளங்க ஒரு பிரபந்தம் பாட வேண்டுமென்று கேட்க, முதலில் மறுத்த கூத்தர், பின்னர் ஒரு நிபந்தனையுடன் பாட ஒப்புக்கொண்டாராம். தாம் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு தலை விழுக்காடு, எழுபது செங்குந்தர் குலத்தலைச்சன் பிள்ளைகளின் தலைகளைக்

காணிக்கையாகக் கொடுக்கும்படி கட்டளையிட, இச் செங் குந்த மரபினரும் கூத்தர் இட்ட கட்டளையை நிறை வேற்றினராம். கூத்தர் அத்தலைகளை ஒன்றன்

மேலொன்று அடுக்கி அத்தலையாசனத்தின் மீதிருந்து,

கலைவாணி நீயுலகி லிருப்பதுவுங் கல்வியுணர்

கவிவல்லோரை நிலையாகப் புரப்பதுவு மவர்.நாவில் வாழ்வதுவு நிசமே

யன்றோ! சிலைவாண னாவிருந்தா யிரம்புயங்கள் துணிந்து முயல்

சீவனுற்றாள் தலையாவி கொடுத்திடுஞ் செங் குந்தருயிர் பெற்றிடே

தயை செய்வாயே

என்று கலைமகளை வேண்டிப் பாட, அத் தலைகள் அனைத்தும் தத்தம் உடல்களில் வந்து பொருந்திக் கொண்டனவாம். இவ்வாறு பொருந்தி ஒட்டிக்கொண்டு இறந்தவர் உயிர் பெற்ற காரணத்தினால் அவ்வாறான நிலை- அற்ற தலையும் உடலும் ஒட்டப் பாடிய காரணத்தினால் ஒட்டக்கூத்தர் என்று பெயர் வந்ததென்று விநோத ரச மஞ்சரி கூறும். விநோத ரச மஞ்சரி கூறும் செய்திகள் வரலாற்றாய்வு உணர்வுக்குப் பொருந்துவன வல்ல எனக் கருதி ஒதுக்கி விடலாம்.

10. விநோதரச மஞ்சரி, பக்கங்கள் 238-239.