பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26

இனி, தக்கயாகப் பரணியில்,

செருத்தங் தரித்துக் கலிங்கரோடத் தென்தமிழ்த் தெய்வப்பரணி கொண்டு வருத்தங் தவிர்த்துல காண்டபிரான் மைந்தர்க்கு மைந்தன் வாழ்த்தினவே (776) என்னும் தாழிசைக்கு உரைகாரர், இப் பரணி பாடினார் ஒட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள். இப் பரணிப் பாட்டுண்டார் விக்கிரமசோழதேவர் என்று குறிப்பிட்டுள் ளார். இத்தாழிசையில் வரும் தென்தமிழ்த் தெய்வப் பரணி என்பது கூத்தர் பாடிய கலிங்கப் பரணியையே குறிக்கும் என்று சிலரும், செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியைக் குறிக்கும் என்று சிலரும் கருதுவர். பெரும்பாலும் தக்கயாகப் பரணி குறிப்பிடும் தென் தமிழ்த் தெய்வப்பரணி கலிங்கத்துப் பரணியே என்பது பொருத்த மாகும.

சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையின் உரையில் அடியார்க்கு நல்லார் மூன்று பரணித் தாழிசை களைக் காட்டுகின்றார். இப் பாடல்களில் ஒரு பாடல் கலிங்கத்துப் பரணியில் உள்ளது. ஏனைய இரண்டும் எப் பரணியைச் சார்ந்தன என்பது தெரியவில்லை. ஆனால் முதற் தாழிசையின் இறுதியில் கவிச்சக்கரவர்த்தி என்ற குறிப்புக் காணப்படுகின்றது. இதனால் அப் பட்டம் பெற்ற ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கப் பரணியில் இத் தாழிசைகள் இருந்திருக்கலாம் என்று முடிவு செய்யலாம். இந்நூல் விக்கிரம சோழனின் படைத் தலைவனான அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காலிங்கராயன் மீது இயற்றப் பெற்றது. இந் நூலின் பெயர், அரும்பைத் தொள்ளாயிரம் என்று இருத்தல் தவறு என்றும் அரும் பகைத் தொள்ளாயிரம் என்பதே பொருந்துவது என்றும் கூறுவர். இந்நூல் கிடைக்கவில்லை. இந் நூல் வச்சத் தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரம் போன்றது போலும் .