பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

போந்த புலியுடனே புல்வாய் ஒருதுறைகீர் மாந்த உலகாண்ட மன்னர் பிரான்.

- குலோத்துங்க : 7

புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும் ஒக்க வொருகாலத் துாட்டினோன்.""

- இராசராச : 5

இதுபோன்றே களவழி பாடிக் கோச்செங்கட் சோழன் சிறைக் கோட்டத்திலிருந்து சேரமான் கணைக்காலிரும் பொறை பொய்கையாரால் சிறை மீட்கப்பட்ட செய்தி ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். இதனைக் கூத்தர் மூன்றுலாக் களிலும் பின்வருமாறு கூறுவர். ---

மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்

பாதத் தளைவிட்ட பார்த்திபனும்.' ட விக்கிரம : 14

படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்.'

- குலோத்துங்க : 20

நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் காற்றளையை விட்டகோன்.

- இராசராச : 18 இதுபோன்றே விசயாலய சோழனின் வீரத்திறனை விளங்க எடுத்துரைக்கின்றார்:

எண்கொண்ட தொண்ணு ற்றின் மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் பரவலனும்.'"

-விக்கிரம : 1.5

28. குலோத்துங்க சோழன் உலா, 7. 29. இராசராச சோழன் உலா, 5. 30. விக்கிரம சோழன் உலா, 14. 31. குலோத்துங்க சோழன் உலா, 20. 32. இராசராச சோழன் உலா, 18. 33. விக்கிரம சோழன் உலா, 15.