பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

வருணனைத் திறம்

பேதையை வருணிக்கும் அழகினைப் பின்வரும் பகுதியிற் காணலாம்.

-அங்கொருத்தி வந்து பிறந்து வளரு மிளந்திங்கள் கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து-பைந்தழைத் தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல் வாகை புனைய வளர்கரும்பு-கோகுலத்தின் பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய கிள்ளை பவளங் கிளைத்தகிளை-கள்ளம் தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப் பிரியாப் பருவத்துப் பேதை." -விக்கிரம : 1.12.116 இதனோடு குலோத்துங்க சோழன் உலாவின் பேதைப் பருவ வருணனையும் ஒப்புநோக்கினால் புலவர் எத்துணை பளவு திறம்பட வருணிப்பதில் வல்லவர் என்பதனையும், ரே கருத்தினையே வேறு வேறு வகைகளில் நயம்படக் ளெத்தும் சதுரப்பாடு உடையவர் என்பதனையும் க1ா லாம்.

இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற் புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை-கனைமுகினேர் ஆடாத தோகை யலராத புண்டரிகம் பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை-சூடத் தளிராத சூதங் தழையாத வஞ்சி குளிராத திங்கட் குழவி-அளிகள் இயங்காத தண்கா விறக்காத தேறல் வயங்காத கற்பக வல்லி-தயங்கிணர்க் கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம் ஏழைப் பருவத் திளம்பேதை..

-குலோத்துங்க : 123-127

9. விக்கிரம சோழன் உலா, 1.12.116. 40. குலோத்துங்க சோழன் உலா. 123.127.