பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47

செங்கால்மட அன்னம்படர் தீயாமென வெருகிச்

சிறையிற்பெடை மறையக்கொடு திரியத்திரள் கமுகின் பைங்காய்மர கதமீது படர்ந்தேறி நறுந்தண்

பாளைக்கிடை பவளக்கொடி படர்காவிரி நாடா! தங்காதலி யருமைந்தரும் உடனாக வணங்கித்

'தலைகா, எம துடல் கா, எம துயிர்கா, அக ளங்கா கொங்கா, மன துங்கா!' என மதுரேசர் வணங்கும்

கொல்யானை அபங்கா! இவள் குழலோசை பொறாளே."

இப்பாடலில் அரிய இலக்கியச் சுவை அமைந்திருக்கக் காணலாம். மேலும் ஒட்டக்கூத்தருக்கும் இரண்டாம் குலோத்துங்கனுக்கும் இடையே சிறக்க நிலவிய ஆசிரியர்மாணாக்கன் தொடர்பினைத் தமிழ்நாவலர் சரிதை பின்வருமாறு விளக்குகின்றது. ஒட்டக்கூத்தர் ஒரு சமயம் குலோத்துங்கனின் புகழைப் பாடத் தொடங்கினார்.

ஆடுங் கடைமணிநா அசையாமல் அகிலமெல்லாம் டுேங் குடையில் தரித்தபிரான் என்றும் - என்று பாடிக் கொண்டிருந்த அளவில் இதனைக் கேட்டுக் கொண்டே வந்த சோழன், தான் ஒட்டக்கூத்தர்மாட்டுக் கொண்ட ஆசிரிய அன்பினையும் பணிவுடைமையினையும் பாங்குமப் புலப்படுத்தும் வகையில், கூத்தர் தாம் தொடங்கிய பாடலை முடிப்பதற்குள், தானே அப்பாடலின் பிற்பகுதியினைப் பின்வருமாறு பாடி முடித்தான் என்பர். -நித்தநவம் பாடுங் கவிப்பெருமாள் ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்கச் சோழனென்றே என்னைச்

சொல்லுவரே. 7

இரண்டாம் இராசராசனைக் குறித்தும் இவர் தனிப் பாடல்கள் சிலவற்றை இயற்றியதாகத் தெரியவருகின்றது.

76. தமிழ் நாவலர் சரிதை (கமுகப் பதிப்பு 132. 77. 5. A : 131