பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின்-பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை புல்லரிடத் தேயறிமின் போய்.

என்ற பாடலால் சோமன் கொடைப் பெருமை நன்கு வெளிப்படும். பழிகாரர் சிலர் ஒட்டக்கூத்தரைத் துரத்தி வந்தபொழுது .ே சா ம ன் வாயிலிற்கு ஒடிச் சென்று ஒட்டக்கூத்தர் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையிற் பின்வரும் செய்யுள் காணப்படுகின்றது.

அடையென்பார் தள்ளென்பார் அன்பொன் றிலாமற் புடையென்பார் தங்கடைக்கே போகேம்

கொடையென்றால் முந்துஞ்சோ மாபுவனை முன்னவனே கின் குடைக்கீழ் வந்துய்ஞ்சோ மாதலான் மற்று.

மேலும், சோமன் ஒருகால் சோழ மன்னனைக் கான வேண்டி அரண்மனை வந்து, அரசனைக் காண அமயம் பார்த்து நின்றபோது, அரசனைக் கண்டு திரும்பும் கூத்தரை அரசனைக் காணத் தகுந்த சமயம் யாது?’ என வினவ அதற்குக் கூத்தர் மறுமொழி கூறிய பாடல் வருமாறு:

தன்னுடைய தேவியர்க்குத் தார்வளவன் தானுரைப்பது உன்னுடைய கீர்த்தி யுயர்நலமே-துன்னுடிகழ்ச் சோமா திரிபுவனத் தோன்றலே நின்புகழை யாமோ ருரைக்க வினி . " நெய்த்தானப் பெருமானை ஒட்டக்கூத்தர் பாடிய தாகப் பின்வரும் செய்யுள் தனிப்பாடல் திரட்டில் காணப் படுகின்றது. இப் பாடலில் அமைந்துள்ள அரிய பொருள், வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.

84. ஒளவையார் தனிப்பாடல்

85. தமிழ் நாவலர் சரிதை 134.

86. 5 : : 133. - y