பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64

புதுவைச் சடையன் பொருந்துசங் கரனுக் குதவித் தொழில்புரி யொட்டக் கூத்தனைக் கவிக்களி றுகைக்குங் கவிராட் சதனெனப்

புவிக்குயர் கவுடப் புலவனு மாக்கி வேறுமங் கலநாள் வியந்துகாங் கயன்மேற் கூறு நாலாயிர்க் கோவைகொண் டுயர்ந்தோன். தம்மை ஆதரித்த புதுவைக் காங்கேயன் மீது நாலாயிரக் கோவை என்னும் நூலினை ஒட்டக்கூத்தர் பாடியதாகத் தெரிகிறது. அந்நூல் இன்று கிடைக்காமை யினால் இது குறித்து மேலும் ஒன்றும் கூறுவதில்லை.

  • உலா என்னும் பிரபந்தம் பாடுதலில் ஒட்டக்கூத்தர் வல்லவர் என்பதற்குச் சில சான்றுகளை மூவருலா" க் கொண்டு நிறுவலாம்.

கூத்தரின் காவியப் புலமை

இராமாயணமும், பாரதமும் இந்திய நாட்டின் இரு கண்கள்; இதிகாசம் எனப் போற்றப்படும் இலக்கியங்கள். இ வ் வி ல க் கி ய நிகழ்ச்சிகள் சங்ககாலந்தொட்டே தமிழகத்தில் புலவர்ால் கவிதைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டன. காலம் செல்லச்செல்ல இக்கதைகள் இலக்கிய உலகில் பெரும்பங்கு பெற்றன. கூத்தர் இக் காப்பியங்களில் நல்ல பயிற்சி உடையவரே என்பது மூவர் உலாவால் வெளிப்படுகின்றது. . -

இராமன் மிதிலையில் வில்லை உடைத்த நிகழ்ச்சியை, மாதை, ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை, இறுக்கு மவனிவனென்பார் (குலோத்துங்க: 116) என்ற கண்ணியிற் காணலாம். இராமன் கடலின் மீது அம்பெய்த நிகழ்ச்சியைப் பின்வரும் அடிகளால் குறிப்பிடுகின்றார். .

-முற்கோலி வட்ட மகோததி வேவ வொருவாளி விட்ட திருக்கொற்ற விற்காணிர்'

-இராசராச: 84