பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70

7. தக்கயாகப் பரணி ஏன் பாடினார் ?

ஒட்டக்கூத்தர் தம்மைக் குலகுருவாகவும், ஞானாசிரிய ராகவும், அவைக்களப்புலவராகவும் பெரிதும் மதித்துப் போற்றிய இராசராசனைத் தக்கயாகப் பரணியில் சிறப் பித்துள்ளார். இப்பரணியில் பல பெயர்கள் கூறி, இராச ராசனைப் பாராட்டுகின்றார். இராசராசன் சிறப்புப் பெயர்களாக இவர் குறிப்பிடும் எட்டுப் பெயர்களைப் பின்னிணைப்பில் காண்க. இரண்டாவதாக, நல்ல பழுத்த சைவர் ஒட்டக்கூத்தர் என்பதால், சிவபெருமானுடைய சிறப்பினைக் கூறும் தக்கயாகப் பரணியினை இயற்றினார் எனலாம். சிவபெருமானை 61 பெயர்களால் அழைக்கக் காணலாம். (பார்க்க: பின்னிணைப்பு) மூன்றாவதாக தேவி உபாசகர் ஒட்டக்கூத்தர் என்பது நாம் அறிந்த செய்தி யாகும். கலைமகளையும், கோயில் கட்டி வழிபட்டவர் இவர். எனவே தேவியின் - துர்க்கையின் - காடுகெழு செல்வியின் வீரமும் ஈரமும் ஒருங்கே பேசும் பரணியினை இயற்றினார் எனலாம். உமாதேவியின் திருப்பெயர்களாக இவர் 55 பெயர்களைக் குறிப்பிடுவர். (பார்க்க : பின் னிணைப்பு). தம் புலமை நலந் தோன்றப் பரணி நூலினை யாத்தார் என்றுங் கொள்ளலாம். இறுதியாகத் திருஞான சம்பந்தர் பெருமானிடத்துத் தாம் கொண்ட ஈடு பாட்டினைக் காட்டுவதற்குப் பதினைந்து பெயர்களால் திருஞான சம்பந்தர் பெருமானைச் சுட்டுகின்றார். (பார்க்க:பின் னிணைப்பு) சம்பந்தரிடத்தும் தாம் கொண்ட ஈடுபாட்டினைப் புலப்படுத்த ஒர் அரிய இடமாகக் கொள்ள - தக்கயாகப் பரணியினைத் தேர்ந்தெடுத் தாரோ என்று கருதும் வகையில், இப்பரணியின் இடையில் திருஞானசம்பந்தர் மதுரை சென்று சமணரை வாதில் வென்ற வரலாற்றுச் செய்தியினை வைத்துள்ளார்.

இதனைச் சிறிது விளங்கக் காண்போம்.