பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

சோழர் சரித்திரம்' எனும் நூலால் (பகுதி 2: பக்கங்கள், 44.118) நன்கு அறியலாம்.

முடிவுரை

ஒட்டக்கூத்தர் அப்பர் அடிகளைப் போல் நீண்டநாள் வாழ்ந்தவர். சாற்சுவையும், பொருட்சுவையும் திரம்பிய பனுவல்களை ஈந்தவர். செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி என்னும் வரலாற்றுப் பரணியைப் பாட, ஒட்டக் கூத்தரோ தக்கயாகப் பரணி என்னும் சமயப் பரணியைப் பாடினார். பரணியில் புரட்சியை உண்டாக்கியவர் கூத்தர். இவர் தொடங்கிவைத்த இப் பரணிப் போக்கே அஞ்ளு வதைப் பரணி, பாசவதைப் பரணி, மோகவதைப் பரணி முதலிய பரணிகளுக்கு வழிகாட்டியாயிற்று, ஒட்டக் கூத்தருக்கு முன் திருக்கைலாய ஞான உலா போன்ற இறை உலாக்கள் தோன்றின. கூத்தரோ வரலாற்று உலாக்களை வடித்தார். பிள்ளைத் தமிழ் என்னும் பெரிய தமிழுக்கு வடிவும் வனப்பும் கொடுத்தார். இவர் புலவரில் புலவர்; கவிஞரில் கவிஞர். இவர் இயற்றிய நூல்கள் இவர் பெருமைக்குச் சான்றாக என்றும் விளங்கும்.

-: இறைவாழி தரைவாழி நிறைவாழி

இயல்வாழி இசைவாழியே’’