பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எளியோர் முத்தூரர் நாடி வருதல்

கடல்கோக்கிச் செல்லா நின்ற
கணக்கற்ற நதிகள் போலும்
இடல்கோக்கிச் செல்லா நின்ற
ஏற்பவர், எளியோர், பஞ்சம்
சுடல்நோக்கிச் சுற்று முற்றும்
சோறின்றித் தவித்தோ ரெல்லாம்
தொடல்கோக்கிக் கூலிக் காளாய்த்
தொடர்ந்துமுத் துார்க்கே வந்தார்.

ஒளியூரும் ஊரொன் றன்றி
ஊறுாரும் ஊரி னின்றும்
அளியூரும் முத்து ருக்கோர்
ஆள் வந்து சேர்ந்தா னென்றல்,
கிளியூர்ந்த கூடோர் விடாய்க்
கேடுற்றுக் கிடந்த தேவூர்!
களியூர்ந்து வாழும் செல்வர்
காட்டிலே படுத்த தோரேர்!

பள்ளி ஆரம்பவிழா அழைப்பு

உழைப்பவன் நெஞ்சில் கொஞ்சம்
ஊக்கமும் உதிக்க, வினாய்ப்
பிழைப்பவன் நெஞ்சில் கொஞ்சம்
பீதியும் பிறக்க, நந்தன்
விழிப்புணர் வெங்கும் மேலும்
விளைத்திட விரும்பி யன்றே
அழைப்புகள் விட்டான் பள்ளி
ஆரம்ப விழாக்கொண் டாட!

133