பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மண்பாடு பெற்ற ஞான்றே
மக்களின் பசிநீங் கிற்று;
பெண்பாடு பெற்ற ஞான்றே
பெருமைநம் வீடெய் திற்று;
எண்பாடு பெற்ற ஞான்றே
ஏற்றமும் பெற்றோம்; முற்றும்
பண்பாடு பெற்ற ஞான்றே
பரிமளித் தோம் நாம் பாரில்!

சுப்பையன் மாடி யாகச்
சோமப்பன் மச்சே யாக
அப்பையன் வீடே யாக
அழகப்பன் குச்சே யாக!
குப்பையைச் சுத்த மாகக்
கூட்டியே எறியா ராயின்
'தப்பையா எனச் சொல் லோமேல்
தரணியில் வாழ்வென் னாகும்?

கெஞ்சினை? மிகவும் நன்றாய்
நிமிர்த்தியே நடந்தா னேனும்,
வஞ்சனை பொய்பே ராசை
வகையரா நெஞ்சில் வைத்தே
நஞ்சினை யொத்துற் றாரை
நலிவிப்போ னுடனே கூடிக்
கொஞ்சினோ மென்றால் இக்தக்
குவலய வாழ்வென் னாகும்?

137