பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வீட்டினில் வட்டிக் காசால்
விருந்துண்ணும் வீணர்க் காகக்
காட்டினில் தோட்டர் தன்னில்
கருத்துடன் உழவர் பட்ட
பாட்டின்கற் பயன னைத்தும்
பறிபட்டுப் பரத விக்கும்
நாட்டில்நல் லாட்சி கோலி
நலமுறச் செய்வே னின்றே.


ஆரியப் பொய்யாம் புல்பூண்
டடர்த்தியாய் முளைத்த தாலே
சீரிய தமிழ்க்கோட் பாடாம்
செழும்பயிர் வளர்ச்சி குன்றிக்
கோரிய பயன்பெ றாமல்
குன்றிய மக்க ளோங்கப்
பாரினில் அறிவா ராய்ச்சி
பரவுதல் செய்வே னென்றே.

18