பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          “சிறந்தவர் தம்மைக் கானின்
          சேவித்துக் கொண்டி ராமல்,
          இறக்திடுங் காறும் காமும்
          இவரினும் சிறப்போ மென்போம்;
          திறந்தது கண்கள்! இன்று
          தெய்வம்போல் உம்மைக் கண்டோம்;
          பறந்தது துயரம்; எங்கள்
          பணிவான வணக்கம்,” என்றார்.

          கிட்டன் வண்டிக்காரரிடம்
          கட்டட உபயம் கேட்டல்
          புல்லேற்றி வண்டி மூன்றும்
          புறப்பட்டுப் போகும் போது,
          கொல்லேற்றைப் போலும் வந்து
          குறுக்கிட்டு கின்று கொண்டே
          கல்லேற்றிக் கோவில் கட்டக்
          'கட்டட உபயம்’ என்ற
          சொல்லேற்றிக் கேட்டான், நாகப்
          பன்சொன்ன தாகக் கிட்டன்.

          வண்டிக்காரர் நந்தனைத்
          தெய்வமெனப் புகழ்தல்
          பிழையின்றி நாங்க ளெல்லாம்
          பெரும்பக்தி யுடையோ மேனும்,
          மழையின்றி, உழவு மின்றி,
          மாட்டுக்குத் தீனி இன்றித்
          தழையின்றிப், பேணிக் காத்த
          தாவரம் வறள, வேறு
          வழியின்றி வந்தோம், ஐயா!
          வைக்கோலை வாங்கிச் செல்ல.

53