பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          தொழில் போற்றல்


          'திலகத்தை ஒத்திந் நாட்டில்
          திகழ்திடும் தொழில்வல் லோரின் -
          கலகத்தில் கள்ளம், சூது
          கயமைபே ராசை யாதி
          பலகைத்த முறையில் நாளும்
          பலர்கையில் புழங்க உள்ள
          உலகத்துச் செல்வ மெல்லாம்
          உழைப்பின்வே றுருவம் கண்டீர்!

          நமக்காக நாயா? அன்றி
          நாய்க்காக நாம்உள் ளோமா?
          உமிக்காக அரிசி உள்ள
          தென இந்த உலகம் இன்று
          சுமக்காத பார மாகச்
          சும் மாட்டின் மீதில் குந்தி
          அமுக்காத விதமாய் நம்மை
          அமுக்குதல் அறியீ ரோநீர்!

          ஊர்பிடித் தாள உள்ள
          உத்தியோ கத்தன் ஆதி
          சீர் பிடித் தெழுது வோன்,அச்
          சேற்றுவோன், விற்போன், கற்போன்
          நேர் பிடித் தொழுகி வாணி
          பம்செய்வோன், நெய்வோன்-யார்க்கும்
          ஏர்பிடித் துழுவோ னேதான்
          எசமானன் என்ப தோரீர்!

71