பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          மண்ணினில், 'மாதா என்னும்
          மாட் சிமைக் குரிமை பூண்டாள்,
          கண்ணினில் வைத்துக் காக்கும்
          கருமணிப் பாவை போன்றாள்
          பெண்ணெனில், பிறரைப் போலப்
          பேசுதற் கியலா தென்றே
          எண்ணினில் தென்ற, மேலே
          எண்ணுதல் அற்றன், நந்தன்.

          துளசி தன் விருப்பம் மொழிதல்
          புகழ்ச்சிக்குப் பொருத்த மான
          புலவனும் மெளன மானான.;
          மகிழ்ச்சிக்குப் பொருத்த மான
          மனைவியும் மெளன மானுள்;
          நிகழ்ச்சிக்குப் பொருத்தி நின்று
          நிகழ்ந்ததை கேரில் கண்ட,
          இகழ்ச்சிக்குப் பொருத்த மானாள்
          எண்ணிமேல் இயம்ப லுற்றாள்.

          "ஆழக்கண் ணீரும் வற்றி
          அழுவதும் மறந்தேன்; அண்ணா
          கூழுக்கண் ணாந்து நிற்கும்
          குறைதீர்ந்திக் குழந்தை யோடும்
          ஏழைக்கென் றெண்ணிப் பண்ண
          இருக்கின்ற தொழில்இங் கொன்று:
          கோழிப்பண் னைக்கு வேண்டிக்
          கொள்கின்றேன் நானே இன்று.

84