பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கவிஞன் உள்ளம் ஆடுவது எல்லாரும் அறிவதோர் நிகழ்ச்சி. இதனைப் பண்டைய நூல்கள் வெறியாட்டு' என்று குறிப்பிடு கின்றன. காளியம்மன், மாரியம்மன், மதுரைவீரன் போன்ற தெய்வங்களைக் கும்பிடுபவர்கள் இத்தகைய வெறியாட்டைப் பார்த்திருக்கலாம், உடலெல்லாம் சாம்பலேத் தடவிக்கொண்டு பலவிதத் தழைகளையும் பூக்களேயும் அணிந்துகொண்டு வேலேயோ குலத் தையோ கையில் ஏந்திக்கொண்டு ஆடுவார்கள். இதனேக் காண்பதற்கு பலர் கூடியிருப்பார்கள். பலி யிடுவதற்கு நன்ருகக் குளிப்பாட்டிச் சந்தனம், குங்குமம் முதலியன அணியப்பட்ட ஆடு ஒன்று அருகே கட்டப் பட்டிருக்கும். சிறிது நேரத்தில் முடிவு காலம் கிட்டப் போகிறதென்பதை ஆடு அறியாது. மனிதர்கள் அடை யும் மகிழ்ச்சியை அதுவும் பகிர்ந்துகொண்டு உணர்ச்சி பொங்கக் களிப்புடனிருக்கும். ஆடிக்கொண்டு பூசாரி தன்னருகே வரும்போது அவன் கையிலுள்ள தளிர் களுடன் கட்டிய வாசனை வீசும் பூமாலையை எட்டிக் கவ்வி ஆசையுடன் உண்டு மகிழும். சற்று கேரத்தில் தனக்கு முடிவு காலம் கிட்டப்போகிறதென்பதை அறிந்தால், அவ்வாட்டிற்கு இந்த நிலையற்ற மகிழ்ச்சி உண்டாகாது. சமணப் பெரியார் ஒருவர் இங்கிகழ்ச்சியைக் காண்கிருர். அங்கிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொண்டு சிற்றின்பத்தில் மிகுந்த மயக்கங்கொண்டு பேரின்பத்தை காடாது இருக்கும் மனிதக் கூட்டங் களுக்கு ஒரு நீதியைக் கற்பிக்கின்ருர், ' படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக் கெடுமிதோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/104&oldid=781492" இலிருந்து மீள்விக்கப்பட்டது