பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவு காளைகள் § { திருத்தக்க தேவர் சீவகசிந்தாமணியைப் பாடுங் கால் காளைகளின் காட்சியும் மாமன் மருகரது தொடர் பும் அவரது கினேவுக்கு வந்தன. ஏமாங்கத காட்டு வளத்தைப் பாடுங்கால், இக்கருத்துக்கள் அடங்கிய சொற்படம் வெளிப்படுகிறது. இதோ ஆப்படம்: மாமனும் மருகனும் போல அன்பின காமனும் சாமனும் கலந்த காட்சிய, பூமனும் அரிசிப்புல் லார்ந்த மோட்டின தாமினம் அமைந்துதம் தொழிலின் மிக்கவே. ( சாமன் - காமன் தம்பி: பூ - குவளை, கழுநீர் முதலியன; ஆர்த்த-உண்ட, அனுபவித்த, மோட்டின-வயிற்றினே யுடையன ! பாவலன் உவமையை அமைத்த திறம் உள்ளுங் தோறும் உவகை பயக்கிறது. எல்லா அன்பையும்விடத் தாயன்பு சிறந்ததாயிற்றே, அதனே விட்டது என்ன காரணம் என்று கேட்கலாம். சேர்ந்து நின்ற இரண்டும் ஆண்கள். தாய் பெண்பாலாதலால், அவ்வுவமையைக் கொள்ளவில்லை. சரி, தந்தையன்பு தாயன்புக்கு அடுத்தபடியாக இருக்கிறது, அதையாவது கொள்ளலாமே என்ருல், அங்குக் கட்டப்பட்டிருந்த காளைகள் ஒன்று மற் ருென்றிலிருந்து பிறக்கவில்லை; உழவன் இரண்டு காளை களையும் வெவ்வேறிடத்தில் வாங்கிச் சோடி சேர்த் திருந்தான். ஆகவே, அவ்வுவமையையும் கொள்ள வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/109&oldid=781503" இலிருந்து மீள்விக்கப்பட்டது