பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையின் தாலாட்டு zo 'நெஞ்சிற் பதிவு செய்யச் செஞ்சொற் கவியே சிறந்தது' என்று கூறுகின்ருர் புலவர் சகவீர பாண்டி யனர் அவர்கள். கவியின்பம் கலையறிவில் கனிந்து விளையும் ஒரு ஆற்றல். செய்யுள் சுருங்கிய சொற்களால் பெரும் பொருளே அமைத்து, இன்னேசை கலந்து செய்யப்பட்டுள்ளமையால் கருத்தைக் கவர்ந்து உணர்வு களே எழுப்பும் ஆற்றல் வாய்ந்தது; அறிவு கிலேயைப் பற்றிக் கொண்டுபோய் படிப்போரின் உணர்வு நிலையைக் கிளப்பிவிடும். உரைநடை கருத்தைத் தெரிவிக்கும் கருவியாக இருந்தாலும், அதற்கு உணர்வு கிலேயைத் தொடுவ தற்கு அவ்வளவு ஆற்றல் இல்லே. அது பெரும்பாலும் அறிவு நிலையைப் பற்றித்தான் நிகழும். என்ருலும், செஞ்சொற்கள் பெய்து எழுதப்பட்ட கடையுள்ள உரைநடைக்கும் படிப் போரு க்கு மெய்மறதியைக் கொடுக்கவல்ல ஆற்றல் உண்டு. இயற்கையிலேயே பசுவின் பாலுக்கு சுவை, யுண்டு. அதை வற்றக் காய்ச்சி, கட்டியாகத் திரட்டி, அதில் சீனியையும் கலந்து உண்பவர்களுக்கு அது மிகுந்த சுவையைக் கொடுக்கிறது. கன்ருக விளைந்த கரும்பைப் பிழிந்த சாற்றை உண்டால், அதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/115&oldid=781517" இலிருந்து மீள்விக்கப்பட்டது