பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டைச் செவியர் ஆங்கில மொழி பயின்று அம்மொழியிலுள்ள இலக்கியங்களைப் படித்து இன்பம் நுகர்ந்தவர்கள் மில் L–&Tuqih (Milton) @##13 of Lorujuh (Shakespeare) நன்கு அறிவார்கள். நமது நாட்டில் படியாதார் முதல் பாவலர் வரையிலும் கம்பரை அறிந்துள்ளதுபோல் மேல் நாட்டில் மில்டனையும் செகப்பிரியரையும் அறிந் திருக்கிருர்கள். இவர்களில் செகப்பிரியர் எழுதியுள்ள நாடகங்களும் மில்டன் எழுதியுள்ள பெருங்காப்பியங் களும் தனிப்பாடல்களும் தல சிறந்தவை. மில்டனின் உம்பருலக நீக்கம் (Paradise Lost) ஆங்கில மொழி உள்ள அளவும் கிலேத்து நிற்கும் ஒரு திப்பியகாப்பியம். அதனை எழுதத் தொடங்கிய வரலாறு மில்டனது தாய்மொழிப்பற்றைக் காட்டு கிறது. கிரேக்க மொழியிலுள்ள இலியட (Iliad) டைப் போலவும், ஒடிஸ்லி (Odyssey) யைப் போலவும் தான் ஒரு நூல் எழுதவேண்டும் என்றும், அதைத் தனது தாய் மொழியாகிய ஆங்கிலத்திலேயே எழுதி அம்மொழியின் நிலையை உயர்த்தவேண்டும் என்றும், இன்பக்கன ஒன்று கண்டார். இதனைப்பற்றி எழுத லாம் எனப் பல நாட்களாகச் சிந்தித்துக்கொண்டிருந் தார். கடைசியில் மனிதன் வீழ்ச்சி” (The fall of

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/119&oldid=781525" இலிருந்து மீள்விக்கப்பட்டது