பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவியுணவு கோடைக்காலம். எங்கும் ஒரேவெயில், கோடைக் கால வெயிலின் கொடுமையைத் தாங்கமுடியாது. வெயிற்காலத்தில் ஆடுமாடுகள் மேயும் புல் வெளிகளில் புல் காண்பது அரிது. புல் வெளி ஒரே சுடுகாடாக த் தான் தோன்றும். இத்தகைய புல்வெளிகளில் ஆடுகள் அலேந்து திரிந்து தேய்ந்த புற்கட்டையை ஒரு சிறிது மேயலாம்; மாடுகள் மேய்வது மிகக்கடினம். ஒரு நாள் நடுப்பகலில் அலேந்து திரிந்த எருமைக் கடா ஒன்று இரை கிடைக்காது ஒரு குளத்திற்கு வந்து சேர்ந்தது. அதற்கு ஒரே பசி: தண்ணீர்த் தவிப்பும் கூட. குளத்தில் குவளேக்கொடிகள் ஏராளமாக இருந்தன. பொதுவாக எருமைகளுக்குத் தண்ணிரில் இருக்க மிக விருப்பம். அத்துடன் அதற்கு வேண்டிய உணவும் அத்தண்ணிரிலிருந்துவிட்டால் அதன் மகிழ்ச்சி யைச் சொல்லவும் வேண்டுமா? தண்ணிரையும் பச்சைப் பசேலெனக் கிடந்த குவளேக் கொடிகளையும் கண்ட வுடனே எருமைக் கடாவுக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டாய்விட்டது. ஆர்வத்துடன் குளத்தில் இறங் கிற்று. அதன் பசி அதற்கல்லவா தெரியும் அழகுடன் மலர்ந்துள்ள பூங்கொத்துக்களடங்கிய குவளைக்கொடி யைப் பேராவலுடன் வாய் நிறையக் கெளவி எடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/145&oldid=781583" இலிருந்து மீள்விக்கப்பட்டது