பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணம் செய்துகொள் 31 அளவு கடந்த அன்பு கொண்டிருந்தனர்; அவளே காளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தனர். வளர்த்து என்ன பயன்? அவள் ஆண் மகன் போல் எப்போதும் அவர்களுடன் இருக்க முடியுமா? எப்பொழுதாவது கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குப் போகவேண்டியவள் தானே அவிள்? பெற்ருேர்கள் தம் மகளது களவு ஒழுக்கத் தைத் தமக்குத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவள்மீது அளவு கடந்த கோபம் கொண்டாலும், அதையும் அவர்கள் வெளிக்காட்டவில்லை. காட்டி லுைம் முடியுமா? கோபித்துக் கொண்டால், ஒருக்கர்ல் வீட்டை விட்டுக் கம்பி நீட்டிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணித்தான் கோபித்துக் கொள்ளவில்லே போலும். அவர்கள் மட்டிலும் என்ன, உலகியலே அறியாதவர்களா? தாம் இளமையாக இருந்தபோது காதல் ஒழுக்கத்தில் ஒழுகவில்லையா? இப்போது எப்பொழுதையும்விட அதிக அன்பு காட்டலாயினர். ' என் கண்ணே, நீ வெளியே போகாதே. நீ வெளியில் ப்ோனல், எனக்கு என்னவோமாதிரியிருக் கிறது. என்னுல் தனிமையாக வீட்டில் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியவில்லே ” என்று கூறுவாள் தாய் ஒரு நாள். “ எங்கும் போகவில்லை அம்மா, கமது தோட்டத் தில்தானே இருந்தேன்' என்பாள் மகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/49&oldid=781686" இலிருந்து மீள்விக்கப்பட்டது