பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£2 கவிஞன் உள்ளம் அழுதபடியே பல நாட்கள் சென்றன. ஒரு நாள் அழுது கொண்டிருந்தபடி வானத்தைப் பார்க்க நேர்ந்தது. வெண்மேகம் ஒன்றைக் கண்டாள். அதைப் பார்த்துப் பேசத் தொடங்குகிருள். " ஏ மேகமே! எனது காதலர் சென்ற கானகத் தில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. அவர் அங்கே வாடி வதங்குகின்ருர். இந்த நேரத்தில் நீ வறண்டு வெண் மேகமாயிருந்து என்ன பயன்? ஒரு காரியஞ் செய் அவரது பிரிவால் என் கண்களில் நீர் கடல் போல் பெருகுகின்றது. நீயும் உன் இனத்தைச் சேர்ந்த மேகங்களும் இக்கண்ணிர்க் கடலில் எவ்வளவு வேண்டு மானுலும் நீர் முகந்து கொள்ளலாம். நீர் தாராளமாக இருக்கிறது; எடுக்க எடுக்கப் பெருகிக்கொண்டே யிருக்கும். வெப்பம் மிகுந்த எனது கணவர் சென் ,D கானகத்திலும் நீர் மிகுதியாகத் தேவையாயிருக்கும். ஆகவே, அன்பு கூர்ந்து கின் நண்பினங்களுடன் கூடி என்கண்ணிர்க்கடலில் நீர் முகந்துகொண்டு, கருநிறமாகி இவ்வான் வழியே விரைந்து செல்; சென்று, அவர் இருக்கும் வெம்மையான காட்டில் அவர் செல்லுமிட மெல்லாம்.சென்று நீர்த்துளிகள் வீசி வெப்பம் மிகாத படி தணிவிப்பாயின் மிகப்பேருதவியாக விருக்கும். நீ அப்படிச் செய்வாயோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/80&oldid=781757" இலிருந்து மீள்விக்கப்பட்டது