பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கவிஞன் உள்ளம் வதையே நிறுத்திவிட்டான்; வீட்டை விட்டு வெளி வருவதுகூடக் கிடையாது. அவளேயும் அவளது பெற்றேர்கள் கண்டித்து வந்தார்கள் காவல்கலையும் வைத்தார்கள்; ஒரே இற்செறிப்பு.'ஊரிலுள்ள இதரப் பெண்கள் அவளைப் பற்றி அடிக்கடி பேசி வந்தார்கள். அவளும் வெட்கத் தால் யார் முகத்திலும் விழிப்பதில்லை; எப்போதும் வீட்டினுள்ளேயே பொழுதுபோக்கி வந்தாள். அவளது களவொழுக்கத்தை அவளது ஆருயிர்த் தோழி நன்கு அறிந்திருந்தாள்; பிரிவுத் துயரால் வாடும் அவளது மனே கிலேயைத் தோழி நன்கு அறிந்தாள். அதற்கு மருந்து காணவும் முயற்சி செய்தாள். விரைவாக அவளுக்குத் திருமணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணினுள். அவனைச் சந்தித்து அதைஅவ்னிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தாள்: அவனைச் சந்திக்கும்போது அவன் அவளது நிலையை யும் ஊர்நிலையையும் அறிய விரும்புவானே என்றும் கருதினுள். தோழி விரைவில் அவனைச் சந்தித்தாள்: சொல்ல வேண்டியவைகளைக் குறிப்பாகக் கூறினுள்; அவன் சிறந்த அறிஞதைலால் புதை பொருளைத் தெரிந்து கொள்ளட்டுமே என்று கருதினுள் போலும். அவனேச் சந்தித்தது மாலே நேரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/86&oldid=781767" இலிருந்து மீள்விக்கப்பட்டது