பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு மொழி 菇姆 “ஒளிபுொருந்திய பகலவன் மேற்குத்திசையில் மறைந்து கொண்டிருக்கிருன். உலகெல்லாம் தன் னுடைய ஒளி பரவும்படி, தெளிந்த கடற் பரப்பில் அதன் அலேகளே நீக்கிக்கொண்டு, குளிர்ந்த கதிர்களே யுடைய முழு நிலா எழுந்து தனது அழகிய ஒளியைப் பெய்கிறது. பலவகையான பறவைக்கூட்டங்கள் தமது இரைகளே கிறைய அருந்திப் பசியாறித் தமது இருப்பிடங்களே அடைகின்றன. வீட்டருகிலுள்ள உப்டிங்கழியில் ஆரவாரமெல்லாம் அடங்கிவிட்டது போல் தோன்றுகிறது. கதிரவன் ஒளி இல்லாததால், கழியிலுள்ள வளமான குவிந்த நீல மலர்களும் இதழின் பிரிவு தெரியாமல், கண்டோர் அவற்றை ஒவ்வொரு நீல மணியே என்று எண்ணும்படியாய் இருக்கிறது. இத்தகைய கடற்கரை நாட்டுக்குத் தலைவனே!' என்று பீடிகை போடுகிருள் தோழி. இது வெளிப்படையான பீடிகை. இதன் அடி யில் அடிப்படையான கருத்துக்கள் உறைந்துகிடக் கின்றன. அடிப்படையாக உள்ள உட்கருத்துக் களுக்கு மேற்கருத்துக்கள் உவமையாகத்தான் வந்திருக் கின்றன. இம்மாதிரி வரும் உவமைகளே அகப்பொருள் நூலார் உள்ளுறை உவமம் என்று கூறுவார்கள் பெரும்பாலும் கலித்தொகை, அகநானூறு, நற்றிணை ஐங்குறுநூறு போன்ற அகப்பொருள் நூல்களில் இவ்வகை உவமைகள் மலிவு. உலகுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/87&oldid=781769" இலிருந்து மீள்விக்கப்பட்டது