பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தையும் தெய்வமும் சரிநிகர் சமானமான வாய்ப்பைப் பெறமுடிகிறது. எனவே தான், “கடவுள் தந்த பொருளல்லவோ?...” என்று கண்ணதாசனால் துணிந்து பாட முடிகிறது-இன்றைய நிலையில்! ஆம்; சொந்த விருப்பு-வெறுப்புக்களைக் கடந்த நிலையிலும் நினைவிலுமே கவிதை கருக்கொண்டு, உருக்கொள்ள முடியும். அதனால்தான், கவிஞன் பிறக்கின்றான்!

இந்தப் பாடலை இப்பொழுது மீண்டும் படிப்போமா?

“முத்தான முத்தல்லவோ!
முதிர்ந்து வந்த முத்தல்லவோ!
கட்டான மலரல்லவோ!
கடவுள் தந்த பொருளல்லவோ !
சின்னஞ்சிறு சிறகு கொண்ட
சிங்காரச் சிட்டல்லவோ!
செம்மாதுளை பிளந்து
சிரித்துவரும் சிரிப்பல்லவோ!
மாவடுக் கண்ணல்லவோ!
மைனாவின் மொழியல்லவோ !
பூவின் மணமல்லவோ!
பொன்போன்ற உடலல்லவோ!
வாழாத மனிதரையும்
வாழவைக்கும் சேயல்லவோ!
பேசாத தெய்வத்தையும்
பேசவைக்கும் தாயல்லவோ!

13