பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“கண்ணே மெல்ல மறைத்து
உன்னேக் கையிலெடுத்துக்
கால மெல்லாம் நான்
அனைத்திருப்பேன்!...”

ஆண், தன்னுடைய பலவீனமான காதல் வசப்பட்ட நெஞ்சைக் காதலிக்குக் காட்டக் கூடா தென்று மனத்திடை திட்டம் வகுத்துக் கொண்டாலும் கூட, அவன் வாய் அவனது ஆசை மயக்கத்தை அம்பலப்படுத்தித் தொலைக்கிறது. கண்ணே மெல்ல மறைக்கிறோம் - ‘மெல்ல’ - ஆமாம்; ரொம்பவும் அளந்து விழுந்த சொல். அவனே அவன் அனைத்து மகிழ்ந்திருக்கும் நேரம் பொன் நேரமல்லவா? அவன் நினைவில் அவள் நெஞ்சு தாள் பதித்துக் கிடக்கிறது.

“”கண்ணில் கலந்திருப்பேன்;
நெஞ்சில் நிறைந்திருப்பேன்!”

கண்ணில் நிறைந்து நெஞ்சில் நிறைந்து விடுகிறது நவயுகக் காதலர்களின் காதற் கனவு! போதாதா?

இம்மட்டோடு காதல் வியவகாரம் நின்று விடுவது கிடையாது. அது ஒரு தொடரும் கதை!


தத்துவக் கவிஞர் சுரதா அவர்கள் குயில் ஒன்றைப் பாட்டுடைத் தலைமைப் பதவிக்கு இலக்காக்கி, அப்பாட்டில் கவிஞனின் இதயத்தை அடி நாதாமாக்குகிறார்.

44