பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9 ரதிதேவி


பெண் என்ற சித்திரத்தின் அழகுக் குறிப்புக்களைப் பற்றிய பாடலை மணிவண்ணன் நா. பார்த்தசாரதி ஆக்கியிருந்தாரல்லவா? அழகியின் வருணனை அழகு கொண்டு விளங்குவது இயல்பு.

பேசாத சித்திரம் அவள்.

ஆனால் அந்த ஓவியப் பெண்ணாளை-அதாவது, கம்பனின் சொற்றொடரைப் பயன்படுத்த வேண்டுமானால்-அந்தப் ‘புனையா ஒவிய’த்தைப் பற்றிப் பேசுவதற்கும் வகை புலப்படாமல் விழிக்கின்ற ஒரு நிலையை இங்கு கவிஞர் உண்டாக்குகிறார்.

பெண் எனில், அற்பசொற்பமான பெண்ணா அவள்? முகிலினிடை வெடித்துப் புறப்பட்ட மின்னலென வந்த பெண்ணாம் அவள். அவள் சர்வாங்க லட்சணசுந்தரி. அழகின் கவர்ச்சிகளையெல்லம் ஒரு வடிவமாகக்கொண்டு விளங்குகிறாள் அவள்.அதனால்தான் ‘மெய்ந்நின்ற எழில் கொள் முழு வடிவின்’ அவதாரமாகப் புனைவடிவம் பெற்றுத் திகழ்கிறாள் அவள். சொல்லின் பொருளாகவும், பண்ணின் ஒலியாகவும் உருக்கொள்ளும் சித்திரப் பதுமையைப் புகழ்வதோடு வழி பிடிபடாமல் தவிக்கும் நிலையும் இயற்கைதான். ஆம்; அழகு என்கிற ஒரு தத்துவத்திற்குள் உட்படாமல்,

60