பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்புறம் சூழ்ந்திடும் இன்னிசைக் கின்னரர்
நாரதர் தும்புரு கோஷ்டிகளும்
மன்றிடை நின்றிட மாலேகள் கொண்டொளிர்
மாமண வாளரி ருந்ததையும்,
கண்டதும் கண்டெனக் கவ்விடும் காட்சியில்
சிந்தை கிளர்ந்தனர் மாலயனும்
தண்டெனச் சாம்பிடும் தேவி குறித்தலும்
தாவினள் தீமுனர் வேங்கையென;
சண்டிகை யென்றிட, ருத்திரம் பொங்கிடச்
சீறிடும் பெண்மையின் சோகமெலாம்
மண்டுபுயல் என, மாமழையோவென
மன்றிடை போந்து வெடித்ததுவே!...”

தேவி எனில் ரதி. அவள் தேவி; அழகுக்குத் தலைவி; அழகின் தேவி. அவள் அழகே ஒரு சமயமாகக் கொண்டு நிற்கிருள். அப்படிப்பட்டவள் பவனி புறப்பட்டு ஊர்வலம் வருகிருளென்றால். அதற்கும் ஒரு பொருள் இல்லாமல் இருக்குமா?

அழகு வெள்ளோட்டமிடப் புறப்படும் நிலையை வெகு சரளமாகப் பாடுகிறர் கவிஞர். பிறகு, அந்த ரதிதேவியின் காட்சிக் கனவில் சிந்தை கிளர்ந்த மாலயனேப் பற்றியும் ஆசைக்கனலில் வெடித்துத் துடித்த பெண்மையின் சோகமே இறுதியில் அழகிற்கு ஒரு விதியாக வந்து தொடர்பு கொண்ட மாயப் போக்கைப் பற்றியும் ந. பிச்சமூர்த்தி எவ்வளவோ நுணுக்கமான தத்துவநெறிப் பண்புடன் பாடுகிறார்.

62