இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரிசில் கிழார்
21
யும் பகைவரோடு போர் செய்து வெற்றி பெற்றதையும் பத்துப் பாடல்களில் பாடினார்.
அந்தப் பாடல்களைக் கேட்ட சேரன் உள்ளத்தில் நன்றி அறிவு பொங்கியது. எழுத்துக்கு ஆயிரம் பொன் தருவதற்கு ஏற்ற பாடல்கள் அவை என்று தோன்றியது. என்ன பரிசில் தருவது?
அரசன் ஒரு பை நிறையப் பொன்னைக் கொண்டு வரச் செய்தான். அதைப் பரிசாக அளிக்கப் போகிறான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அரசன் தன் பட்ட மகிஷியை அழைத்துக் கொண்டு வரச் செய்தான். தன் மனைவியின் கையிலிருந்து